தேவையானவை
சிகப்பு அரிசி - ஒன்றரை கப்
கேழ்வரகு - ஒரு கப்
கருப்பு உளுந்து - ஒரு கப்
பச்சை பயறு - ஒரு கப்
உடைத்த கடலை - ஒரு கப்
பாசிப்பருப்பு - ஒரு கப்
மைசூர் பருப்பு - ஒரு கப்
உடைத்த கோதுமை - ஒரு கப்
ஜவ்வரிசி - அரை கப்
கொள்ளு - அரை கப்
சோளம் - அரைக்கப்
பாதாம் - அரை கப்
முந்திரி - அரை கப்
ஏலக்காய் - 10
செய்முறை
மேலே கொடுக்கப்பட்டவற்றில் உடைத்த கடலை பாதாம், முந்திரி, ஏலக்காய் தவிர மற்றவற்றை தனித்தனியாக 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
பின்பு வடிகட்டி உலர்த்தவும்.
அதன் பிறகு தனித்தனியாக வறுத்து எடுக்கவும் .
வறுத்தவற்றை ஆற வைக்கவும்.
கடைசியாக எல்லா பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் அல்லது மாவு மில்லில் கொடுத்தோ அரைக்க வேண்டும்.
சத்துமாவை வயதானவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு மென்மையான மாவாக அரைத்து சற்றே தளர்வான கஞ்சியாக செய்து கொடுப்பது நல்லது.
உங்கள் விருப்பத்தை பொறுத்து இதில் வேர்க்கடலை கம்பு, பார்லி, திணை, கொண்டைக்கடலை சேர்த்து அரைக்கலாம்.