பூண்டு - 100 கிராம்
உளுந்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - கால் தேக்கரண்டி
எள் - கால் தேக்கரண்டி
பொட்டுக்கடலை - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 12
கருவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - ரெண்டு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
புளி - சிறிதளவு
நாட்டு சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
செய்முறை
வாணலையை சூடாக்கி உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, போட்டு மிதமான சூட்டில் வாசனை வரும் வரை வறுக்கவும் .
பிறகு எள், பொட்டுக்கடலை, தேங்காய் துருவல் சேர்த்து பொன் நிறமாக வறுத்து எடுக்கவும்.
மிளகாய் வற்றல், கருவேப்பிலை சேர்த்து முறுமுறுப்பாகும் வரை வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு நல்லெண்ணெய் சேர்த்து பூண்டு லேசாக நசுக்கி சேர்த்து பொன் நிறமாக முறுமுறுவென வரும் வரை வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
பூண்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
வறுத்த பூண்டு ஆறிய பின் மிக்சியில் போட்டு உப்பு ,பெருங்காயத்தூள், புளி, நாட்டுச்சக்கரை சேர்த்து அரைத்து எடுக்கவும் ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைக்கவும்.
பூண்டு பொடி தயார்.