சோயா டம்ப்லிங்ஸ்

kuttybabuPPT
0
சோயா டம்ப்லிங்ஸ்
தேவையானவை 

100 கிராம் சோயா பீன்ஸ் 
ஸ்ப்ரெளட்ஸ் வேக வைத்தது

 50 கிராம் சோயா க்ரான்யூல்ஸ் 

இரண்டு உருளைக்கிழங்கு வேக வைத்தது

 50 கிராம் எள்ளு 

சிறிது பச்சை மிளகாய் 

சிறிது எலுமிச்சை சாறு 

50 கிராம் மைதா 

சிறிது பிங்க் ரெட் ,ஆரஞ்சு, ஃபுட் கலர்

 சிறிது தனியா பவுடர்

 சிறிது கொத்தமல்லித்தழை 

பொறிக்க எண்ணெய்

 சிகப்பு மிளகாயும், உப்பு சுவைக்கு ஏற்ப

 செய்முறை

மைதா மாவை கரைத்து அதில் அனைத்து ஃபுட்டு கலரையும் சேர்த்து சிறிது உப்பு சேர்க்கவும் .

எள்ளை ஒரு பிளேட்டில் பரப்பவும்.

 இப்போது மீதமுள்ள அதாவது க்ரான்யூல்ஸ், சோயா பீன்ஸ், ஸ்பரெளட்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு , தனியா பவுடர், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து இவற்றை ஹார்ட் ஷேப்பில் சிறு சிறு டம்ப்ளிங்களாக செய்யவும்.

 இவற்றை மைதாவில் நனைத்து எள்ளில் ஒத்து எடுக்கவும்.
 கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி டம்ப்லிங்ஸை அதில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்து, சூடாக சர்வ செய்யவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)