சிக்கன் கீமா பிரியாணி

kuttybabuPPT
0
சிக்கன் கீமா பிரியாணி
தேவையான பொருட்கள் 

பாஸ்மதி அரிசி - ஐந்து கப் 

சிக்கன் கைமா - 200 கிராம் 

வெங்காயம் பொடிதாக நறுக்கியது - ஆறு,
நீளமாக நறுக்கியது -  2 

தக்காளி - 3 

இஞ்சி பூண்டு விழுது - நாலு டேபிள் ஸ்பூன் 

தயிர் - கால் கப் 

பச்சை மிளகாய் - நாலு 

மஞ்சள் தூள் -  ரெண்டு டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - நாலு டேபிள் ஸ்பூன்

 கரம் மசாலா - 2 டேபிள் ஸ்பூன்

 சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

 தனியாத்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

 மசாலா பொருட்கள் - பட்டை, லவங்கம், ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ

தேவையான அளவு சாஹிஜீரா ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ தேவையான அளவு, புதினா ஒரு கட்டு, கொத்தமல்லி ஒரு கட்டு, எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு

 செய்முறை

நீளமாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக பொரித்து எடுத்து வைக்கவும்.

 ஒரு பாத்திரத்தில் சிக்கன் கைமாவுடன் பாதி அளவு இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் , மிளகாய் தூள், சீரகத்தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாக கலக்கவும்.

 இந்தக் கலவையை 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.

 வாணலியில் 5 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை, சாஹிஜீரா சேர்த்து வதக்கவும்.

 பின்பு புதிதாக நிறுத்திய வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

 பின்னர் மீதும் உள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

 அடுத்து புதிதாக நறுக்கிய தக்காளியை அத்துடன் சேர்த்து வதக்கியதும், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறவும்.

 அதில் ஊற வைத்த சிக்கன் மற்றும் தயிர் சேர்த்து கிளறி சில வினாடிகள் கழித்து புதிதாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி தழை , பச்சை மிளகாய், தேவை உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

 மிதமான தீயில் வைத்து பாத்திரத்தை மூடி 15 முதல் 20 நிமிடம் வேக வைக்கவும்.

 ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சுத்தம் செய்த பாஸ்மதி அரிசி, பிரிஞ்சி இலை, அன்னாசி பூ, ஏலக்காய் சிறிதளவு, சாஹி ஜீரா ஒரு டேபிள் ஸ்பூன் ,எண்ணெய் சேர்த்து அரை வேக்காட்டில் வேக வைத்து எடுக்கவும்.

 சிக்கன் வெந்த பிறகு ஒரு பாத்திரத்தில் சிக்கன் கலவை ஒரு அடுக்கு, வேகவைத்த அரிசி ஒரு அடுக்கு என்ற விகிதத்தில் வைக்க வேண்டும்.
 இறுதியாக குங்குமப்பூ, தண்ணீர் சிறிதளவு, கொத்தமல்லி தழை, வறுத்த வெங்காயம் கலந்து குறைந்த தீயில் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான சிக்கன் கீமா பிரியாணி தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)