சத்துமாவு வாழைப்பழ மஃபின்ஸ்

kuttybabuPPT
0
சத்துமாவு வாழைப்பழ மஃபின்ஸ்
தேவையானவை

சத்துமாவு மிக்ஸ் - அரை கப் 

கோதுமை மாவு - அரை கப்

 நன்றாக பழுத்த வாழைப்பழம் - இரண்டு 

சர்க்கரை - அரை கப்

 சமையல் எண்ணை - கால் கப் 

பாதாம் பருப்பு பொடியாக நறுக்கியது - கால் கப் 

லவங்கப்பட்டை - ஒரு டீஸ்பூன்

 பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

 பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்

 வெண்ணிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்

 எலுமிச்சை சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்

 உப்பு - ஒரு சிட்டிகை 

செய்முறை 

மைக்ரோவேவ் அவனை 180 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 10 நிமிடங்களுக்கு ஃப்ரீ ஹிட் செய்து மஃபின்ட்ரேயை தயார் படுத்தி வைக்கவும்.

 சத்துமாவு மிக்ஸ், கோதுமை மாவு, லவங்கப்பட்டை தூள், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து இரண்டு முறை சலித்து எடுத்துக் கொள்ளவும்.

 ஒரு பெரிய கிண்ணத்தில் வாழைப்பழங்களை போட்டு நன்றாக மசித்துக் கொள்ளவும்.

 அதில் அரை கப் சர்க்கரை சேர்த்து முழுவதும் கரையும் வரை கலக்கவும்.

 பிறகு இந்த கலவையில் எண்ணெயை ஊற்றி கலக்கவும்.

 பிறகு எடுத்து வைத்திருக்கும் மற்ற பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக வாழைப்பழ கலவையில் கொட்டி நன்றாக கலக்கவும்.

 தயார் செய்துள்ள மாவை மஃபின் லைனர்களில் முக்கால் அளவுக்கு நிரப்பவும்.

 காற்று குமிழிகள் உண்டாவதை தடுக்க டிரேவை இரண்டு அல்லது மூன்று முறை மெதுவாக தட்டவும்.

 மஃபின்களை 180 டிகிரி செல்சியஸில் ப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் 25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

 பேக் செய்து முடித்ததும் மஃபின்களை கவனமாக குளிர்விக்கவும்.
 இப்போது சுவையான மென்மையான சத்துமாவு வாழைப்பழ மஃபின்ஸ் தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)