தோசை நூடுல்ஸ்

kuttybabuPPT
0
தோசை நூடுல்ஸ் 
தேவையானவை 

தோசை - ஆறு 

மெலிதாக நறுக்கிய முட்டைக்கோஸ், கேரட், கொடைமிளகாய், வெங்காயத்தாள், பட்டாணி அனைத்தும் சேர்த்து - ஒரு கப் 

நீலவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் -  4 

எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்

எண்ணெய் - இரண்டு ஸ்பூன்

 கொத்தமல்லி தலை - சிறிதளவு

 உப்பு ருசிக்கு -  ஏற்ப 

செய்முறை

தோசையை இறுக்கி சுருட்டி பெரிய கத்தரிக்கோலால் மெலிதாக நிற்கவும்.

 இது நூடுல்ஸ் போல வரும்.

 கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

 பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி உப்பு சேர்க்கவும்.

 பின்னர் நறுக்கிய தோசை துண்டுகள், எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து ஒரு பவுலின் போட்டு பரிமாறவும்.

 குறிப்பு 

நார்ச்சத்து நிறைந்த சுவையான இரவு நேர டிபன் இது.

 தோசைக்கு பதிலாக சப்பாத்தியிலும் இதே முறையில் செய்யலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)