ஆற்காடு மக்கன் பேடா

kuttybabuPPT
0
ஆற்காடு மக்கன் பேடா
 தேவை 

சர்க்கரை இல்லாத கோவா - அரைக்கப்

 மைதா - 100 கிராம்

 முந்திரி -  4 

பாதாம் பருப்பு - நாலு 

சர்க்கரை - 100 கிராம்

 பேக்கிங் பவுடர் - அரை சிட்டிகை 

நெய் - ரெண்டு தேக்கரண்டி 

எண்ணெய் - பொரித்தெடுக்க 

கெட்டி தயிர் - கால் கப் 

ஏலக்காய் - 5 

செய்முறை 

சர்க்கரையில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து சரியான பதத்தில் பாகு செய்து கொள்ளவும்.

 சர்க்கரைப்பாகில் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

 முந்திரி, பாதாம் பருப்புகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

 மைதா மாவுடன் கோவா, பேக்கிங் பவுடர், நெய், தயிர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

 சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து மேலே நெய் தடவி மூடி வைத்து கால் மணி நேரம் ஊற வைக்கவும் .

கால் மணி நேரத்திற்கு பிறகு பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக எடுத்து தட்டையாக தட்டி அதன் நடுவே பாதாம் முந்திரி வைத்து மூடி திரும்பவும்.

 அதை தட்டியாக தட்டிக் கொள்ள வேண்டும்.

 இவற்றின் மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

 பொரித்தெடுத்த பேடாக்களை சர்க்கரை பாகில் ஊற வைக்கவும்.
 இரண்டு மணி நேரம் ஊறவைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)