தேவையானவை
சோளம் - ஒரு கப்
உளுந்தம் பருப்பு - கால் கப்
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி இலைகள் - கைப்பிடி அளவு
எண்ணெய் - தேவையான அளவு
ஜவ்வரிசி - 4 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - இரண்டு முதல் மூன்று (சிறிய துண்டுகளாக நறுக்கவும்)
வெங்காயம் பொடி பொடியாக நறுக்கியது - ஒன்று
உப்பு - சுவைக்கு ஏற்ப
செய்முறை
சோளம் மற்றும் பருப்பை நன்கு கழுவவும் .
உளுந்தம் பருப்புடன் வெந்தயத்தை சேர்த்து தனியாக நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்.
பருப்பு மற்றும் வெந்தய கலவையை சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மிருதுவான பஞ்சு போன்ற கூழ் போல் அறைத்து தனியே வைக்கவும் .
தண்ணீர் அதிகம் சேர்க்காமல் சிறிது சிறிதாக சேர்த்து ஜவ்வரிசியையும் மென்மையாக அரைக்கவும் .
பருப்பு கலவையில் ஜவ்வரிசி கலவையை சேர்த்து உப்பு கலந்து எட்டு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊர விடவும் .
கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய், கருவேப்பிலை தாளித்து , வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் .
இந்த கலவையை மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.
தோசை தவாவில் கெட்டியான ஊத்தாப்பம் போல் ஊற்றி எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கம் பொன்னிறமாகும் வரை சமைக்கவும்.
சூடாக சட்னியுடன் பரிமாறவும்.