கோல்டன் கிரிஸ்பி இறால்

kuttybabuPPT
0
கோல்டன் கிரிஸ்பி இறால்
தேவையானவை 

இறால் - 300 கிராம் 

முட்டை - ஒண்ணு

 இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

 மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி

 செல்லி பிளக்ஸ் - அரை தேக்கரண்டி

 உப்பு - தேவைக்கு ஏற்ப 

கான்பிளவர் மாவு - இரண்டு தேக்கரண்டி 

கோட்டிங்கிற்கு பிரட் கிரம்ஸ் -  மூன்று

 தேக்கரண்டி

 மைதா - ஒரு தேக்கரண்டி

 மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி 

உப்பு - சிறிதளவு

 எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

 செய்முறை 

சுத்தம் செய்து பின்னர் இறால் முழுவதும் டூத் பிக் குச்சியால் குத்தி எடுக்கவும்.

 பின்னர் ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.

 அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், சில்லிப்ளேக்ஸ், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

 பின்னர் அதில் இறால்களை எடுத்து அதில் சேர்த்து கிளறவும்.

 அதனுடன் கான்பிளவர் மாவை சேர்த்து கலந்து பிறகு அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்.

 பின்னர் ஒரு கிண்ணத்தில் பிரட் கிரம்ஸ், மைதா, மிளகுத்தூள் சிறிதளவு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

 அதில் இறாலை புரட்டி எடுத்துக் கொள்ளவும்.

 பின்னர் எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
 தேவையான கோல்டன் க்ரிஸ்பி இறால் தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)