தேவையானவை
பச்சரிசி - 2 கப்
உளுந்து, பால் - தலா கால் கப்
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
உப்பு , பொரிக்க கடலை எண்ணெய் - தேவைக்கு
செய்முறை
பச்சரிசி, உளுந்து இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் பால், சர்க்கரை, சிறிது உப்பு சேர்த்து நன்றாக பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
கடாயில் எண்ணெயை காய வைத்து ஒரு குழி கரண்டியில் மாவை எடுத்து ஊற்றவும்.
இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுத்து சூடாக கார சட்னி உடன் பரிமாறவும்.
குறிப்பு
அரிசி, உளுந்து இரண்டையும் அரைக்கும் போது அரிசி தட்டுப்படாமல் மை போன்று அரைக்க வேண்டும்.