குல்கந்து குலாப் ஜாமுன்
தேவையானவை
பிரட் - 10 துண்டுகள்
குல்கந்து - 50 கிராம்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
சர்க்கரை - ஒரு கப்
ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
நெய் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
செய்முறை
ஒரு சூடான வாணலியில் தண்ணீர் ஊற்றி அதனுடன் சர்க்கரையை சேர்க்கவும்.
பின்பு அதை நன்றாக கொதிக்க விட்டு சிறிது நேரம் கழித்து அதில் ஏலக்காய் பொடி, குங்குமப்பூ துளி அளவு, எலுமிச்சை சாறு போன்றவற்றை அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இப்போது இனிப்பு பாகு தயார்.
பிரட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு அதன் நடுப்பகுதியை மட்டும் பொடி செய்து கொண்டு அதனுடன் பால் சேர்க்கவும்.
பின்பு அதனை பூரி மாவின் பதத்திற்கு நன்றாகப் பிசைய்யவும்.
இப்போது அதனை உருண்டை பிடித்துக் கொள்ளவும்.
சுவையான குலோப்ஜாம் உருண்டைகள் தயார்.
இந்த உருண்டைகளுக்குள் சிறிதளவு குல்கந்து வைத்து மீண்டும் நன்கு உருட்டிக் கொள்ளவும்.
சூடான எண்ணெய் அல்லது நெய்யில் கல்கண்டு உருண்டைகளை பொன்னிறமாகும் வரை நன்கு பொறிக்கவும் .
பொன் நிறமாக உருண்டைகள் புரிந்த பின்பு அதனை இனிப்பு பாகில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
சுவையான குல்கந்து குலோப் ஜாமுன் தயார்.