ராயர் அடை தோசை
தேவையானவை
கடலைப்பருப்பு - 100 கிராம்
துவரம்பருப்பு - 50 கிராம்
பச்சரிசி - 50 கிராம்
உளுந்து - ஒரு மேசை கரண்டி
காய்ந்த மிளகாய் - ஐந்து
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
தேங்காய் - ஒண்ணு
கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் அல்லது நெய் - - தேவையான அளவு
பக்குவம்
கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பச்சரிசி, உளுந்து என அனைத்தையும் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
அத்துடன் காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து, குருணை பதத்துக்கு அரைத்து வைக்கவும்.
தேங்காயை சிறுசிறு பல்லாக நறுக்கி அரைத்த மாவுடன் சேர்த்துக் கொள்ளவும் .
தோசை கல்லில் ஊறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கருவேப்பிலை, கொத்தமல்லி கலக்கவும்.
அடி கனமான தோசை கல்லில் வார்த்து எடுக்கவும்.
நான் ஸ்டிக் தவாவில் அடி செய்தால் மாவு சரியாக வேகாது .
அடி கனமான இரும்பு கல் சுவையை கூட்டும்.