பாதாம் கேரட் அல்வா கிரம்பில்

kuttybabuPPT
0
பாதாம் கேரட் அல்வா கிரம்பில்
தேவையானவை 

கேரட் - அரை கிலோ 

திக்கான பால் - அரை லிட்டர் 

சர்க்கரை - அரைக்க 

ஏலக்காய் பொடித்தது - நான்கு

 நெய் - இரண்டுமேசை கரண்டி 

தோல் நீக்கி பொடியாக நறுக்கிய பாதாம் - கால் கப் 

கிரம்பில் செய்ய தேவையானவை

நறுக்கிய பாதம் - கால் கப் 

மைதா - முக்கால் கப் 

வெண்ணெய் உப்பு சேர்க்கப்படாதது - கால் கப் 

சர்க்கரை - அரை கப் 

அரைத்த பாதாம் - அரை கப்

 செய்முறை 

ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் கேரட் இரண்டையும் சேர்த்து நன்கு வேக வைக்கவும் .

பால் முக்கால் பாகம் குறையும் வரை நன்கு கொதிக்க விடவும்.

 பிறகு அதில் ஏலக்காய் பொடி, நெய் சர்க்கரை சேர்த்து கிளறவும்.

 அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும் அதில் நறுக்கிய பாதாமை சேர்த்து கிளறி தனியே வைக்கவும்.

 கிரம்பில் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்றொன்றாக சேர்த்து நன்றாக பிசையவும்.

 பார்க்கும்போது பிரட் கிரம்ஸ் துகள்கள் போல் இருக்க வேண்டும்.
 இதை ஒரு ட்ரெயில் வைத்து 180 டிகிரியில் மைக்ரோ அவனில் பேக் செய்யவும் பொன்னிறமாக மாறிய பிறகு அதன் மேல் கேரட் அல்வாவினை வைத்து வருத்த பாதாமினை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)