கார்லிக் கிச்சடி

kuttybabuPPT
0
கார்லிக் கிச்சடி
தேவையானவை

வரஹரிசி - ஒரு கப் 

பாசிப்பருப்பு,துவரம்பருப்பு - கால் கப்

 பூண்டு பற்கள் - எட்டு 

பச்சை மிளகாய் - 4 

கரம் மசாலா - அரை ஸ்பூன் 

எண்ணெய் அல்லது நெய் - நான்கு ஸ்பூன் 

பட்டை - சிறு துண்டு 

சோம்பு - கால் டீஸ்பூன் 

பிரிஞ்சி இலை - ஒன்னு 

கருவேப்பிலை - சிறிதளவு 

உப்பு - ருசிக்கு ஏற்ப 

செய்முறை

வெறும் கடாயில் வரகு அரிசி, பருப்புகளை சேர்த்து சூடு வரும் வரை வறுத்து இறக்கவும்.

 சிவக்க கூடாது .

பூண்டு பற்களின் தோலை உரித்து உரலில் போட்டு நசுக்கவும்.

 பிரஷர் பேனில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து பிரிஞ்சி இலை, சோம்பு, பட்டை , நீலவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் , கருவேப்பிலை சேர்க்கவும்.

 வறுத்த அரிசி, பருப்பு கலவை தேவையான அளவு உப்பு , ஐந்து கப் தண்ணீர் , கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து மூடவும்.

 நான்கு விசில் வரும் வரை வைத்திருந்து அடுப்பை அணைத்து இறக்கி சூடாக பரிமாறவும்

Post a Comment

0Comments
Post a Comment (0)