தேவையானவை
கம்பு - அரை கப்
புளித்த தயிர் - ஒரு கப்
பூண்டுப்பற்கள் - 4
பெருங்காயத்தூள்,சீரகத்தூள் - தலா கால் ஸ்பூன்
வெள்ளரி துருவல், கேரட் துருவல் - தலா இரண்டு ஸ்பூன்
உப்பு - ருசிக்கு ஏற்ப
செய்முறை
வெறும் வாணலியில் கம்பை போட்டு சிவக்க வறுத்து தோலை நீக்கவும்.
பின்னர் அதை மிக்ஸியில் போட்டு ரவை பதத்துக்கு பொடிக்கவும் .
இதனை குக்கரில் போட்டு ஒன்றை கப் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரை மூடவும் .
மூன்று விசில் வந்ததும் முடியை திறந்து கரண்டியால் மசிக்கவும்.
ஆறியதும் கடைந்த தயிர், பெருங்காயத்தூள், சிறகத்தூள், வெள்ளரி , கேரட் துருவல்லாகிவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இது குடிக்கும் பக்குவத்தில் இருக்கும்.
மதியம் செய்து வைத்து விரைவில் மாேர்க்கலந்து குடிக்கலாம்.
வெறும் தண்ணீருக்கு பதிலாக காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்தால் சுவையும் சத்தும் ஒருங்கே கிடைக்கும்.