தேவையானவை
கோதுமை ரவை, புளித்த கெட்டி தயிர் - தலா ஒரு கப்
பாசிப்பருப்பு,கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, உளுந்தம் பருப்பு - தலா இரண்டு ஸ்பூன்
இஞ்சி துருவல் - அரை ஸ்பூன்
மிளகு, சீரகப்பொடி - இரண்டு ஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - ருசிக்கு ஏற்ப
செய்முறை
பருப்பு வகைகளை ஒன்றாக மிக்ஸியில் போட்டு ரவை பதத்தில் உடைக்கவும்.
இதனுடன் கோதுமை ரவை, உப்பு, இஞ்சி துருவல், மிளகு, சீரகப்பொடி, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
தயிரை கடைந்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் கலந்து ஊற்றவும்.
குழிவான தட்டில் லேசாக எண்ணெய் தடவி ரவை கலவையை சேர்த்து இட்லி பாத்திரத்தில் ஆவியில் ஏழு நிமிடம் வேகவைத்து எடுக்கவும் .
பின்னர் கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
ஆறியதும் விருப்பமான அளவில் துண்டுகள் போட்டு பரிமாறவும்.