தேவையானவை
கொள்ளு - ஒரு கப்
தக்காளி - கால் கப்
கேரட் - கால் கப்
வெள்ளரிக்காய் - கால் கப்
கேப்சிகம் - கால் கப்
கொத்தமல்லி இலைகள் - கால் கப்
ஆலிவ் எண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் கொள்ளை கழுவி ஊற வைக்கவும் .
அரை வெப்பநிலையில் தலைகீழாக ஒரு பாத்திரத்தில் மூடி 24 மணி நேரம் விடவும் .
அவ்வாறு செய்யும்போது கொள்ளு முளைவிட்டிருக்கும் .
மேலும் நீண்ட முறைகள் வேண்டும் என்றால் இன்னும் ஒரு நாள் துணியில் கட்டி வைக்கலாம்.
ஒரு கிண்ணத்தில் தக்காளி, கேரட், வெள்ளரி, கேப்ஸிகம், கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை கலக்கவும்.
அதனுடன் கொள்ளு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
ஆலிவ் ஆயில், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.