தேவையான பொருட்கள்
கருவாடு - 100 கிராம்
முருங்கைக்காய் - ஒன்று
கத்திரிக்காய் - நாலு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
சீரகம் ,வெந்தயம் - சிறிது
கருவேப்பிலை - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10 பல்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ரெண்டு
புளி - சிறிய உருண்டை
மிளகாய் தூள் - இரண்டு ஸ்பூன்
மல்லித்தூள் - ரெண்டரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மூடிய தேங்காய் - கால் மூடி
செய்முறை
மொச்சை பயிறை ஊறவைத்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
கருவாட்டை சுடுதண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும் .
சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை இடித்து வைக்கவும்.
தேங்காய்ப்பால் எடுத்து வைக்கவும்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் கறிவேப்பிலை இடித்து வைத்துள்ள பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் .
பின் பெரிய வெங்காயம் சேர்த்து அதனுடன் குழம்புக்கு தேவையான கல் உப்பு சேர்த்து வெங்காயம் நன்றாக வதங்கும் வரை வதக்கவும்.
பின்னர் தக்காளி சேர்த்து எண்ணை பிரிந்து வரும் வரை வதக்கவும்.
பின்னர் காய்கறிகளை சேர்த்து ரெண்டு நிமிடம் வதக்கவும்.
பின்னர் குழம்பு தூள் அல்லது மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் புளி கரைசலை சேர்த்து அதனுடன் குழும்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் .
பின்னர் வேகவைத்த மாெச்சன சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
பின்னர் கருவாடு மற்றும் தேங்காய் பால் சேர்த்து ஒரு காெதிவிட்டு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பாரம்பரிய கருவாட்டு குழம்பு தயார்.