தோசை சாண்ட்விச்

kuttybabuPPT
0
தோசை சாண்ட்விச்
தேவையானவை

நவதானிய மாவு - ஒரு கப் 

தயிர் , பச்சை பயிறு  தலா - கால் கப்

 ஓமம் - அரை ஸ்பூன் 

நெல்லிக்காய் துருவல் - கால் ஸ்பூன்

 நறுக்கிய முள்ளங்கி, தக்காளி, வெங்காயம் - ஒரு கப் 

பூண்டு பற்கள், காய்ந்த மிளகாய் - தலா நாலு 

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

 செய்முறை 

மாவுடன் தயிர், உப்பு, ஓமம் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

 பச்சை பயிரை ஊற வைத்து முளை கட்டவும்.

 இதனுடன் நறுக்கிய முள்ளங்கி, தக்காளி, வெங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுத்து வதக்கவும்.

 கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உறித்த பூண்டு பற்கள், நெல்லிக்காய் துருவல், உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி மிக்ஸியில் போட்டு விழுதாக்கவும்.

 அடுப்பில் தவாவை சூடாக்கி மாவை கனமான சிறிய தோசைகளாக ஊற்றவும்.

 இருபுறமும் நல்லெண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும் .

தோசையின் மீது அரைத்த பூண்டு கலவையை தடவி அதன் மீது வதக்கிய காய்கறி கலவையை சேர்க்கவும்.
 பின்னர் மற்றொரு தோசையால் மூடி பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)