தேவையானவை
அரிசி மாவு, தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா ஒரு கப்
பச்சை மிளகாய் - 4
சீரகம் - ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை
அரிசி மாவு , தேங்காய் துருவலுடன் இளம் சூடான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து மூடி வைக்கவும்.
நறுக்கிய வெங்காயத்துடன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
10 நிமிடம் கழித்து அரிசி மாவு, வெங்காயம், சீரகம், கொத்தமல்லி தழை மிகவும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக பிசையவும்.
இந்த மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கவும்.
தவாவை அடுப்பில் மிதமான சூட்டில் வைக்கவும்.
வாழை இலையில் எண்ணெய் தடவி அதில் உருண்டையை வைத்து மெல்லிய அப்பளமாக தட்டவும்.
இதை நேரடியாக இலையுடன் தவாவில் போடவும் இரண்டு நிமிடம் கழித்து இலையை எடுக்கவும்.
எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுத்து பாசிப்பருப்பு சாம்பார் உடன் பரிமாறவும்.