தேவையானவை
சிவப்பு அவல் - ஒரு கப்
வறுத்த வேர்க்கடலை - கால் கப்
உருளைக்கிழங்கு - ஒன்று
எண்ணெய் - இரண்டு ஸ்பூன்
எலுமிச்சை சாறு, சீரகம் தலா - ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் - ஒன்றரை ஸ்பூன்
கருவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - ருசிக்கு ஏற்ப
செய்முறை
சிவப்பு அவலை ஊற வைத்து நிறை வடிக்கவும்.
வேர்கடலையை கரகரப்பாக பாெடிக்கவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை நீக்கி உதிர்த்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், கருவேப்பிலை சேர்த்து வதக்கி ஊறிய அவல், பாெடித்த வேர்க்கடலை, உதிர்த்த உருளைக்கிழங்கு ,மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி இறக்கவும்.
உறுதியாக எலுமிச்சை சாறு, நறுக்கிய கொத்தமல்லி தலையை சேர்த்து பரிமாறவும்.