சாலட் ராேல்ஸ்

kuttybabuPPT
0
சாலட் ராேல்ஸ்
தேவையானவை 

மல்ட்டி க்ரெயின் பிரெட் துண்டுகள் - ஆறு 

துருவிய கேரட் ,முட்டைக்கோஸ், முள்ளங்கி - ஒரு கப்

 மிகப் பொடியாக நறுக்கிய குடைமிளகாய் ,வெங்காயம் தலா - கால் கப் 

புளிக்காத கெட்டி தயிர் - ஒரு கப்

 வெந்தயத்தூள் - அரை ஸ்பூன்

 மிளகுத்தூள் - 2 ஸ்பூன் 

கறுப்பு உப்பு - ருசிக்கு ஏற்ப 

செய்முறை 

சுத்தமான வெள்ளைத் துணியில் தயிரை கட்டி தொங்க விடவும்.

 தயிரில் உள்ள நீர் முழுவதுமாக வடிந்ததும் அதை ஒரு பவுலில் கொட்டவும்.

 இதனுடன் கருப்பு உப்பு,வெந்தயத்தூள், மிளகுத்தூள் ,துருவிய காய்கறிகள், நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
 பிரட் துண்டின் மீது சப்பாத்தி குழவியால் அழுத்தி தட்டையாக்கவும் இதன் மீது காய்கறி கலவையை சிறிதளவு வைத்து ரோல் செய்து பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)