தக்காளி ஊத்தாப்பம்

kuttybabuPPT
0
தக்காளி ஊத்தாப்பம்
தேவையானவை 

இட்லி மாவு - நாலு கப் 

தக்காளி பொடியாக அரிந்தது - 4 

பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது - ஒன்று 

இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன்

 உப்பு -  சிறிதளவு 

இட்லி பொடி -  மூணு டேபிள் ஸ்பூன்

 சில்லி பவுடர் - ஒரு டீஸ்பூன்

 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது -  2 

அறிந்த மல்லித்தளை - ஒரு டேபிள் ஸ்பூன் 

பெருங்காயம் - ஒரு டீஸ்பூன் 

கேரட் துருவல் -  ரெண்டு டேபிள் ஸ்பூன்

 எண்ணெய் - பத்து டேபிள் ஸ்பூன்

 செய்முறை 

எண்ணெய், இட்லி மாவு தவிர அனைத்து பொருட்களையும் ஒரு பௌலில் கொட்டி கலக்கவும்.

 ஒரு தவாவில் இரண்டு கரண்டி இட்லி மாவை ஊற்றி அதன் மேலே கலந்து வைத்துள்ள தக்காளி கலவையில் இருந்து மூன்று ஸ்பூன் எடுத்து பரவலாக தூவவும்.

 ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ஒரு புறம் வந்ததும் திருப்பி போட்டு வேக வெட்டி எடுக்கவும்.
 காரச்சட்னி தொட்டு சுவைக்கவும்.

 காஷ்மீரி தால் தொட்டும் சுவைக்கலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)