தேவையானவை
ராகி சேமியா, புளிக்காத கெட்டித் தயிர் - தலா ஒரு கப்
மாதுளை முத்துக்கள், கரகரப்பாக புடித்த மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
ஆர்ம்சூர் பொடி, சீரகத்துள், வெந்தயத்தூள் - கால் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய முந்திரி , பேரிச்சை, பாதாம் , பிஸ்தா - தலா இரண்டு ஸ்பூன்
அத்திப்பழம், உலர் திராட்சை - தலா 5
கருப்பு உப்பு - தேவைக்கு
செய்முறை
சேமியாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து முடி வைக்கவும்.
அகலமான பாத்திரத்தில் சேமியா, தயிர், கருப்பு உப்பு, சீரகத்தூள், ஆம்சூர் பொடி, வெந்தயத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
பின்னர் பொடியாக நறுக்கிய முந்திரி, பேரிச்சை, பாதாம், பிஸ்தா, அத்திப்பழம், உலர்த்த திராட்சை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இறுதியாக மாதுளை முத்துக்களால் அலங்கரித்து பரிமாறவும்.