மட்டன் எலும்பு குழம்பு (பக்ரீத் ஸ்பெஷல்)

kuttybabuPPT
0
மட்டன் எலும்பு குழம்பு (பக்ரீத் ஸ்பெஷல்)
தேவையானவை

மட்டன் எலும்பு - அரை கிலோ

 சின்ன வெங்காயம் - 100 கிராம்

 தக்காளி - ரெண்டு 

பச்சை மிளகாய் - தேவையான அளவு

 மசாலா தூள் - மூணு ஸ்பூன் 

இஞ்சி பூண்டு விழுது - தேவையான அளவு 

மிளகு , சீரகம், கசகசா - 2 ஸ்பூன்
 (அரைத்தது)

தேங்காய் பால் - ஒரு கப் 

எண்ணெய் - தேவையான அளவு 

பட்டை - தேவையான அளவு 

கிராம்பு - நாலு

 கறிவேப்பிலை - தேவையான அளவு

 செய்முறை

சின்ன வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

 மட்டன் எலும்பு கறியை நன்றாக கழுவி வைக்கவும்.

 குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கருவேப்பிலை போட்டு தாளித்து பின் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தக்காளியை சேர்க்கவும் .

பிறகு எடுத்து வைத்திருக்கின்ற எலும்பை போட்டு கிளறவும்.

 அடுத்து அதில் உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

 பின்னர் அரைத்து வைத்திருக்கிற சீரக விழுது மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.

 இத்துடன் தேங்காய் பால் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விடவும்.
 ஐந்து விசலுக்கு பிறகு குக்கரை திறந்து கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் மட்டன் எலும்பு குழம்பு ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)