தஞ்சை ஸ்டைல் பழைய முறை ஆட்டுக்கால் பாயா (பக்ரீத் ஸ்பெஷல்)

kuttybabuPPT
0
தஞ்சை ஸ்டைல் பழைய முறை ஆட்டுக்கால் பாயா 

தேவையானவை

ஆட்டுக்கால் - ஆறு 

சின்ன வெங்காயம் - 100 கிராம்

 தக்காளி - 50 கிராம் 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ரெண்டு தேக்கரண்டி

 ஏலம், பட்டை , கிராம்புத்தூள் - அரை சிட்டிகை 

மிளகு - மூணு தேக்கரண்டி 

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

 தனியா தூள் - ஒரு தேக்கரண்டி

 மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

 நல்லெண்ணெய் - ரெண்டு தேக்கரண்டி 

உப்பு - தேவைக்கு 

அரைக்க தேவையான பொருட்கள் மிளகு ,சீரகம், சோம்பு , கொத்தமல்லி, முந்திரி இவற்றை லேசாக வறுத்து அரைத்துக் கொள்ளவும் .

பக்குவம்

எண்ணெயில் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

 பொன் நிறமாக வரும் போது இஞ்சி பூண்டு பேஸ்ட்டை ,கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

 சிறிது நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா சேர்த்து கிளறி தக்காளி, மஞ்சள் தூள் சேர்க்கவும்.

 தேவையான அளவு மிளகாய் தூள், தக்காளி சேர்த்து வதக்கவும் .

வேக வைத்து சுத்தம் செய்து துண்டாக்கிய ஆட்டுக்காலை உப்பு மற்றும் அரைத்த மிளகு மசாலாவை சேர்த்து கொதிக்க வைத்து இறுதியாக கொத்தமல்லி சேர்க்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)