சாக்லேட் குஜியா

kuttybabuPPT
0
சாக்லேட் குஜியா
தேவையான பொருட்கள் 

மைதான - இரண்டு கப்

நெய் - கால்  கப் 

தண்ணீர் - அரை கப் 

ஸ்டஃப் செய்ய டார்க் சாக்லேட் - ஒரு கப்

 உலர்ந்த தேங்காய் - கால் கப்

 ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை

 வெல்லம் - ஒரு மேசை கரண்டி 

பாதாம் - அரைக்கப் 

ஒரு பாத்திரத்தில் மைதாவை போட்டு அதனுடன் நெய் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

 இந்த கலவையை அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

 டார்க் சாக்லேட்டை தூவிக் கொள்ளவும்.

 ஒரு பவுலின் துருவிய டார்க் சாக்லேட், தேங்காய், பாதாம் மற்றும் வெல்லம் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

 பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டி போல் தேய்த்துக் கொள்ளவும்.

 சாக்லேட் , தேங்காய் கலவையை தேய்த்து வைத்துள்ள ரொட்டியின் நடுவில் வைத்து ஸ்டஃப் செய்யவும்.

 அதன் ஓரங்களில் தண்ணீர் சேர்த்து நன்கு ஒட்டி வைக்கவும் .

அடுப்பில் அகலமான பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தேய்த்து வைத்த குஜியாவை போட்டு பொன்னிறமாக வரும் வரை வைத்திருந்து எடுக்கவும்.

 சூப்பரான சாக்லேட் குஜியா ரெடி

Post a Comment

0Comments
Post a Comment (0)