கடுகு கோழி வருவல்

kuttybabuPPT
0
கடுகு கோழி வருவல்
தேவையானவை 

கோழிக்கறி - அரை கிலோ 

வெங்காயம் - 100 கிராம் 

தக்காளி - 100 கிராம் 

பச்சை மிளகாய் - 3 

சீரகம் - அரை சிட்டிகை 

இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு 

உப்பு - தேவையான அளவு 

மிளகாய் தூள் - ஒரு சிட்டிகை 

கடுகு - அரை சிட்டிகை 

மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை 

புதினா - கைப்பிடி 

கொத்தமல்லி இலை - கைப்பிடி 

கடுகு எண்ணெய் - சிறிதளவு 

தயிர் - கால் கப் 

செய்முறை

மிளகு, கடுகு, சீரகம் மூன்றையும் சிறிது தண்ணீர் விட்டு தனியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

 மிளகாய் பொடி, உப்பு, தயிர், இஞ்சி பூண்டு விழுது அரைத்து வைத்திருக்கின்ற கடுகு பேஸ்ட் அனைத்தையும் அரை கிலோ கோழிக்கறியோடு கலந்து அரை மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.

 அடுப்பில் வைக்கிற பாத்திரத்தில் சிறிதளவு கடுகு எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்த பிறகு நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

 பின்னறுக்கிய தக்காளியையும், பச்சை மிளகாயையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும் .

பிறகு மூடி வைத்திருக்கிற கோழிக்கறியை இதனோடு சேர்த்து நன்றாக கிளறி புதினா மல்லிகை தூவி இருவது நிமிடத்தில் இறக்கினால் கடுகு கோழி ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)