ஸ்பெஷல் மசாலா முட்டை

kuttybabuPPT
0
ஸ்பெஷல் மசாலா முட்டை
தேவையான பொருட்கள் 

முட்டை - 4 

கருவேப்பிலை - தேவையான அளவு

 உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - அரை குழி கரண்டி

 மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி

 பெரிய வெங்காயம் - 100 கிராம்

 தனியாதூள் - ஒரு தேக்கரண்டி

 மிளகுத்தூள் - இரண்டு தேக்கரண்டி

 பச்சை மிளகாய் - 4

 செய்முறை

முட்டை நான்கு எடுத்துக் கொண்டு நான்கையும் நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.

 வெங்காயத்தையும், மிளகாயையும் சிறு துண்டுகளாக சதுரம் சதுரமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

 ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவேப்பிலை போட்டு நன்கு தாளிக்கவும் .

பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

 பின்னர் அதே வாணலியில் மிளகுத்தூள், தனியா தூள், மிளகாய் தூள் முட்டை என எல்லாவற்றையும் சேர்த்து தேவைக்கு தகுந்தபடி உப்பு சேர்த்து கிளறவும்.

 முட்டை மசாலாவுடன் சேர்ந்து வந்ததும் இறக்கி விடலாம்.
 இப்போது முட்டை மசாலா ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)