தேவையானவை
இடியாப்பம் - அஞ்சு
பெரிய வெங்காயம் - ஒன்று
குடைமிளகாய் - ஒன்று
பீன்ஸ் - 10
நெய் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
உப்பு - அரை தேக்கரண்டி
செய்முறை
காய்கறிகளை பொடியாக நறுக்கி உப்பு போட்டு வதக்கவும் .
இடியாப்பத்தை வெந்நீரில் சிறிது நேரம் சேர்த்து வடிகட்டி அதனுடன் நறுக்கிய, வதக்கிய காய்கறிகளுடன் சேர்த்து கிளறவும்.
கொத்தமல்லி தூவி சாப்பிடலாம்.
இட்லி அரிசியை ஊறவைத்த மாவை மிதமாக தீயில் வைத்து கெட்டியாக கிளறினால் இடியாப்ப மாவு ரெடி.
இதனை அச்சில் பிழிந்து ஆவியில் வேக வைத்தால் இடியாப்பம் தயார்.