தேவையானவை
சிகப்பு காராமணி, வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
தேங்காய் துருவல் - நாலு டீஸ்பூன்
செய்முறை
சிவப்பு காராமணி வறுத்து ஒரு மணி நேரம் ஊற வைத்து குலையாமல் வேக விட்டு எடுக்கவும் .
வெல்லத்தைப் பிடித்து தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
சிறிது கெட்டியானதும் வேக வைத்த காராமணி சேர்த்து, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.