தேவையானவை
மல்டி க்ரெய்ன் பிரட் துண்டுகள் - ஆறு
பெரிய சைஸ் கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம், குடைமிளகாய், பூண்டு - தலா ரெண்டு
ஓமப்பொடி, எண்ணெய் - தலா ரெண்டு ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - ருசிக்கு ஏற்ப
செய்முறை
கத்திரிக்காய், தக்காளி, வெங்காயம், உரித்த பூண்டு, குடைமிளகாய் ஆகியவற்றை முன் கரண்டியில் குத்தி அடுப்பு தனலில் நேரடியாக காட்டி தோல் கருப்பாகும் வரை சுட்டு எடுக்கவும்.
பின்னர் தோலை உரித்து கைகளால் நன்றாக மசிக்கவும்.
மிக்சியில் போட வேண்டாம் பின்னர் அதனுடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும் .
பிரெட் துண்டுகளின் மீது சிறிதளவு வெண்ணையை தடவும் பின்னர் வெஜிடபிள் டிப்பை அதன் மீது சேர்க்கவும் .
இறுதியாக ஓமப்பொடி, கொத்தமல்லி தழையை தூவி உடனடியாக பரிமாறவும்.