சேனை பொரியல்

kuttybabuPPT
0
சேனை பொரியல்
தேவையானவை 

சேனைக்கிழங்கு - 250 கிராம் 

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் 

புளி - எலுமிச்சை அளவு 

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் 

கடுகு , உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் - சிறிதளவு 

எண்ணெய் - 100 மில்லி 

உப்பு - தேவையான அளவு

 செய்முறை 

சேனையை தோல் சீவி பொடியாக நறுக்கி புளி தண்ணீரில் சேர்த்து, உப்பு மஞ்சள் தூள் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிட்டு தண்ணீரை வடித்து விடவும் .

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து வடிகட்டி வைத்த சேனையைப் போட்டு பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு மொறு மொறு வென்று வரும் வரை கிளறி இறக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)