பிரண்டை துவையல்

kuttybabuPPT
0
பிரண்டை துவையல்
தேவைபடும் பாெருட்கள்

பிரண்டை - ஒரு கட்டு 

நல்லெண்ணெய் - நாலு தேக்கரண்டி

 கடுகு - கால் தேக்கரண்டி 

மிளகாய் வற்றல் - பத்து 

புளி -  சிறிய எலுமிச்சை அளவு 

பூண்டு - 10 

கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி

 உளுந்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

 உப்பு - தேவைக்கு ஏற்ப 

செய்முறை 

பிரண்டையை நன்கு கழுவி சுத்தம் செய்து தோலை உரித்து உள்ளிருக்கும் தண்டு பகுதியை மட்டும் தனியாக எடுக்கவும்.

 வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் பிரண்டையை நன்கு வதக்கி எடுத்து வைக்கவும்.

 மீண்டும் சிறிது நல்லெண்ணையை விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், பூண்டு அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கி ஆறியபின் வதக்கிய பிரண்டை புளி சேர்த்து அரைத்து எடுத்தால் பிரண்டை துவையல் தயார்.

 குறிப்பு 

பிரண்டை அரிக்கும் தன்மை உள்ளதால் அதனை சுத்தம் செய்யும்போது கையில் சிறிதளவு நல்லெண்ணெய் தடவிக்கொள்ள வேண்டும்.

 பலன்கள் 

பிரண்டை உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்.

 ஞாபக சக்தியை கொடுக்கும் .

மூளை நரம்புகளை பலப்படுத்தும்.

 எலும்புகளுக்கு சக்தி தரும்.

 ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவை நிறுத்துவதுடன் வாயு பிடிப்பை போக்கும் .
வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)