ஓமவள்ளி ரசம்

kuttybabuPPT
0
ஓமவள்ளி ரசம்
தேவையானவை 

ஓமவள்ளி இலை - ஆறு 

மிளகு - ஒரு தேக்கரண்டி 

துவரம் பருப்பு - இரண்டு தேவை கரண்டி 

தனியா - ரெண்டு தேக்கரண்டி 

மிளகாய் வற்றல் - 2 

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

 தக்காளி - இரண்டு 

கருவேப்பிலை - சிறிதளவு

 உப்பு - தேவைக்கேற்ப 

செய்முறை 

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் மிளகு, துவரம் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகிவற்றை நன்றாக வறுத்து பாெடித்து செய்து கொள்ளவும்.

 தக்காளியை வேகவைத்து அதில் அரைத்த பொடியை உப்பு சேர்த்து கொதிக்க விடவும் .

பின்னர் வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து வழக்கமான ரசம் போல் செய்யவும்.

 பின்னர் அதனை இறக்கி ஓமவள்ளி இலைகள் மற்றும் கருவேப்பிலையை கிள்ளிப்போட்டு ஐந்து நிமிடம் மூடி வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து பரிமாறவும் .

ஓமவள்ளி ரசம் தயார் .

பலன்கள் 

சளி தொல்லை மற்றும் மூக்கடைப்பு, மார்பு சளி போன்றவற்றை குணப்படுத்தும்.

 மேலும் அஜீரணத்தால் ஏற்படக்கூடிய வயிற்று வலி மற்றும் வாந்தியை போக்கவல்லது.

உணவு ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால் கூட அதனை ஓமவள்ளி தீர்க்கும்.

 இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
 அதோடு சிறுநீரகப் பிரச்சனை, சிறுநீரகத் தொற்று , நீர்க்கடுப்பு ஆகியவற்றை போக்க பெரிதும் உதவுகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)