சமையல் டிப்ஸ் கேட்டுக்காேங்க ப்ரண்ட்ஸ்
ரவா தோசை செய்யும் போது, ரவையை நன்றாக வறுத்து பிறகு ஊற வைத்து சிறிது மைதா மாவுடன் கலந்து மற்ற பொருட்களையும் சேர்த்து தோசை வார்த்தால் பட்டுப் போல எடுக்க வரும்.
கறிவேப்பில்லை துவையலுக்கு உளுந்தம் பருப்புக்கு பதில் வேர்க்கடலையை வறுத்து போட்டால் துவையல் சிறப்பாக இருக்கும்
பருப்பு பொடி அரைக்கும் போது இரண்டு தேக்கரண்டி ஓமம் சேர்த்து அரைத்தால் மணமாக இருக்கும்
எலுமிச்சை ஊறுகாயுடன் சிறிது வதக்கிய இஞ்சித் துண்டுகள் சேர்த்து கொண்டால், ருசியாக இருக்கும்
தோசை மெல்லியதாக நன்றாக வர வேண்டும் என்றால் சிறிதளவு ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் பளபளவென்று மெல்லிய தோசை வரும்