மிஸ்ஸி ரொட்டி

kuttybabuPPT
0
மிஸ்ஸி ரொட்டி
தேவையானவை

மல்ட்டி க்ரெய்ன் மாவு - ஒரு கப்

 பாசிப்பருப்பு - கால் கப் 

மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள், சீரகத்தூள் - தலா கால் ஸ்பூன் 

பச்சை மிளகாய் - 4 

பூண்டு பற்கள் - இரண்டு

 புதினா - சிறிதளவு 

உப்பு , எண்ணெய் - தேவைக்கு

 செய்முறை 

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடித்து மிக்ஸியில் போடவும் .

அதனுடன் புதினா உறித்த பூண்டு, உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள் , பெருங்காயத்தூள், சீரகத்தூள் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

 இதனுடன் கோதுமை மாவு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து சிறிய அப்பளங்களாக திரட்டி சூடான தவாவில் சுட்டெடுக்கவும்.

 வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
 இந்த ரொட்டியை இரண்டு சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)