சைனீஸ் பிரைடு ரைஸ்

kuttybabuPPT
0
சைனீஸ் பிரைடு ரைஸ்
தேவையானவை 

பாசுமதி அரிசி - அரை கிலோ 

கேரட் - 150 கிராம் 

பீன்ஸ் - 150 கிராம்

 குடைமிளகாய் - 150 கிராம்

 வெங்காயத்தாள் -  பதினைந்து கிராம்

 அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை

 சோயா சாஸ் - ஒரு ஸ்பூன்

 பூண்டு - எட்டு பல் 

வெங்காயம்  பெரிது - மூணு

 பச்சை மிளகாய் - தேவையான அளவு

 கருவேப்பிலை - சிறிது

 உப்பு - தேவைக்கு ஏற்ப

 ரீபைன்ட் ஆயில் - தேவையான அளவு

 செய்முறை 

பாஸ்மதி அரிசியை உதிரி உதிரியாக வேகவைத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆறவைக்கவும் .

பின் வாணிலையை அடுப்பில் வைத்து கொஞ்சம் ரீபைண்டு ஆயில் ஊற்றி எண்ணெய் சூடானதும் ஆறு பூண்டு பல்லை தோலுடன் லேசாக நசுக்கி எண்ணெயில் போடவும் .

பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ,கருவேப்பிலை போட்டு வதக்கவும் .

வதக்கியவுடன் நறுக்கிய குடைமிளகாயை போட்டு வதக்கவும்.

 பிறகு மேற்கூறிய எல்லா காய்கறிகளையும் பொடி பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும் .

பிறகு ஒரு சிட்டிகை அஜினோமோட்டோ போட்டு தேவையான அளவு உப்பு போட்டு காய்கறிகள் வேகும் வரை வதக்கவும்.

 எல்லாம் நன்றாக வந்தவுடன் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை போட்டு லேசாக வதக்கி ஒரு ஸ்பூன் சோயா சாஸ் ஊற்றி நன்றாக கலந்து ஆறிய சாதத்தை கொட்டி சேர்த்து கிளறவும் .

முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து மேலே தூவவும் .
மிகவும் ருசியான ஃப்ரைடு ரைஸ் ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)