தேவையான பொருட்கள்
வெண்பூசணிக்காய் - ஒரு கைப்பிடி
உப்பு மற்றும் மிளகு - தேவையான அளவு
செய்முறை
சிறிதளவு வெண் பூசணிக்காய் எடுத்து விதை நீக்கி தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த பின் அதில் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து குடிக்கலாம்.
100 மில்லி அல்லது 150 மில்லி அருந்தினால் போதும் அதிகமாக குடிக்க வேண்டாம்.
பலன்கள்
பூசணிக்காய் ஆனது நீர் சத்து நிறைந்த காய் அது மட்டுமல்லாது குறைந்த அளவு கலோரி உள்ள காய்கறி என்பதால் வாரத்தில் மூன்று நாட்கள் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தது.
அதனால் கரோனிக் டிசிசஸ் உடையவர்களுக்கு நல்லது.
வைட்டமின் ஏ அதிகமாய் இருப்பதால் பார்வைக் கோளாறு உள்ளவர்கள் அருந்தி வந்தால் நல்ல பலன் இருக்கும்.