கேரட் கீர்
தேவையானவை
கேரட் - அரை கிலோ
காய்ச்சி ஆறிய பால் - இரண்டு டம்ளர்
பனைவெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்
செய்முறை
கேரட்டை தோல் சீவி நன்றாக கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும் .
சிறிய நறுக்கிய துண்டுகளை குக்கரில் போட்டு வேக வைக்கவும் .
ஆறியதும் பனை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, சிறிதளவு பால் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைக்கவும்.
அரைத்த விழுதை மீதமிருக்கும் பாலில் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஏலக்காய் தூள், ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
தேவைப்படும்போது எடுத்து கண்ணாடி குடுவைகளில் நிறைத்து குளிர குளிர பருகவும் .
சுவையான கேரட் கீர் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது.