தேவையானவை
கவுனி அரிசி - ஒரு கிண்ணம்
வெல்லம் அல்லது பனைவெல்லம் - 1 1/2 கிண்ணம்
தேங்காய் துருவல் - அரைக்கப்
சுக்குத்தூள் - அரை தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
முந்திரி - பத்து
செய்முறை
கவுனி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து பால், தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்ததும் வடிகட்டி வைக்கவும்.
வாணலியில் வைத்து சுக்குத்தூள் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கலவை பாத்திரத்தில் கொட்டி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி முந்திரியில் அலங்கரித்து ஆறிய உடன் துண்டுகளாக போடவும்.
சுவையான கவுனி அரிசி அல்வா தயார்.