பருத்தி பால் குடிச்சு பாருங்க கோபால்

kuttybabuPPT
0
பருத்தி பால் 
தேவையானவை

பருத்தி விதை - ஒரு கப் 

கருப்பட்டி தூள் - அரை கப்

 தேங்காய் துருவி அரைத்த பால் - ஒரு மூடி 

பச்சரிசி மாவு - 2 ஸ்பூன் 

பொடிக்க 

தோல் சீவிய சுக்கு - ஓர் அங்குல துண்டு

 சித்தரத்தை - ஓர் அங்குல துண்டு

 திப்பிலி தலா -  அரை டீஸ்பூன்

 ஏலக்காய் - 4 

பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன்

 செய்முறை

பருத்தி விதையை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும் .

மறுநாள் விதைகளை மிக்ஸியில் ஒரு சுற்று அரைக்கவும்.

 அதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்து வடிகட்டவும்.

 பிறகு அதனை பாெடித்து எடுக்கவும்.

 கருப்பட்டி தோளுடன் ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கரைத்து வடிகட்டவும் .

அரிசியை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து விடுதாக அரைத்து எடுக்கவும்.

 அதனுடன் தண்ணீர் சேர்த்து கரைக்கவும் .

அடிகனமான பாத்திரத்தில் பருத்தி பாலை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கிளறிக் கொண்டே காய்ச்சவும்.

 அதனுடன் அரிசி மாவு கரைசல் சேர்த்து கிளறவும் .

பிறகு கருப்பட்டி கரைசல் பொடித்தவற்றை சேர்த்து மூன்று நிமிடங்கள் கிளறிக் கொண்டே நன்கு கொதிக்க விடவும் .

இறுதியாக தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி சூடாக பரிமாறவும் .

பக்குவம் 

பருத்தி பாலை ஊற்றி காய்ச்ச ஆரம்பித்ததில் இருந்து இறக்கும் வரை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

 இல்லை என்றால் அடி பிடித்துக் கொள்ளும் .
நீரழிவு நோய் உள்ளவர்கள் கருப்பட்டி, பனங்கற்கண்டுக்கு பதிலாக உப்பு சேர்த்து பருகலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)