வாழைத்தண்டு மோர் குழம்பு

kuttybabuPPT
0
வாழைத்தண்டு மோர் குழம்பு
தேவையானவை

நறுக்கிய வாழைத்தண்டு - ரெண்டு கிண்ணம் 

கடைந்த தயிர் - நான்கு கிண்ணம்

 பச்சை மிளகாய் - இரண்டு

 சீரகம் - ஒரு தேக்கரண்டி

 தனியா தூள் - ஒரு தேக்கரண்டி

 கடலைப்பருப்பு - ஒரு கிண்ணம் 

இஞ்சி - சிறிய துண்டு 

கடுகு - கால் தேக்கரண்டி

 பெருங்காயத்தூள் - சிறிதளவு

 மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

 கருவேப்பிலை - சிறிதளவு

 கொத்தமல்லி தலை - சிறிதளவு

 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

 செய்முறை 

முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைத்தண்டை போட்டு அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து கொள்ளவும் .

அதேபோல் கடலைப் பருப்பையும் வேகவைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 அடுத்து பச்சை மிளகாய், தனியா தூள், சீரகம், கொத்தமல்லி தழை, இஞ்சி ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து வேக வைத்துள்ள வாழைத்தண்டுடன் சேர்த்து கலக்கவும்.

 பின்னர் அதனுடன் வேக வைத்துள்ள வாழைத்தண்டுடன் சேர்த்து கலக்கவும்.

 பின்பு அதனுடன் தயிர், உப்பு வேகவைத்துள்ள கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
 பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் வாழைத்தண்டு கலவையையும் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் வாழைத்தண்டு மோர் குழம்பு தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)