வாழைத்தண்டு புலாவ்

kuttybabuPPT
0
வாழைத்தண்டு புலாவ்
தேவையானவை 

அரிசி - ஒரு கப் 

வாழைத்தண்டு - பெரிய துண்டு 

மோர் - ரெண்டு கப் 

தண்ணீர் - தேவையான அளவு

 சீரகத்தூள் - அரை டீஸ்பூன் 

மல்லி தூள் - ஒரு டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் 

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் 

பெரிய வெங்காயம் - 2 

பிரிஞ்சி இலை - 2 

பட்டை - ஒரு சிறிய துண்டு 

கிராம்பு - ரெண்டு 

ஏலக்காய் - 2

 கொத்தமல்லி தழை - சிறிதளவு 

இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்

 நெய் , உப்பு - தேவையான அளவு

 புதினா - சிறிதளவு 

செய்முறை 

முதலில் பாஸ்மதி அரிசியை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

 பின் வெங்காயம், புதினா மற்றும் கொத்தமல்லி தலையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

 பின்பு வாழைத்தண்டை பொடியாக நறுக்கி மோரில் ஊற வைத்து மோரை வடித்து விட்டு குக்கரில் வாழைத்தண்டை போட்டு இரண்டு விசில் விட்டு எடுக்க வேண்டும்.

 அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

 பின் வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.

 வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதைக்கி வேகவைத்த வாழைத்தண்டு, உப்பு , சீரகத்தூள் , மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்க வேண்டும்.

 அதனுடன் ஒரு கப் மோர் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
 பின் கொதி வந்தவுடன் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை நன்கு கலைந்து கொதிக்கும் கலவையில் சேர்த்து நறுக்கிய கொத்தமல்லி தழை புதினா சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேக விட வேண்டும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)