இளநீர் குல்ஃபி

kuttybabuPPT
0
இளநீர் குல்ஃபி

 தேவையான பொருட்கள் 

இளநீர் - ஒரு டம்ளர் 

தேங்காய் - ஒரு கப்

 பால் - கால் லிட்டர்

 சர்க்கரை - 100 கிராம்

 ஏலக்காய் தூள் - சிறிதளவு 

முந்திரி, பாதாம், பிஸ்தா - சிறிதளவு 

பட்டர் ஸ்காட்ச் எசென்ஸ் - சிறிதளவு 

செய்முறை 

முதலில் அரை பதமாக உள்ள இளநீர் தேங்காயை மிக்ஸி ஜாரில் எடுத்துக் கொள்ளவும்.

 அதனுடன் ஒரு டம்ளர் இளநீர் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

 கால் லிட்டர் பாலை கொதிக்க வைத்து ஆரம்பித்து எடுத்துக் கொள்ளவும் .

அதனுடன் சர்க்கரையை பொடித்து சேர்த்து மிக்ஸி ஜாரில் ஒரு நிமிடம் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

 அதன் பின் பாலுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து ஒரு அரை நிமிடம் அரைக்கவும்.

 பட்டர் ஸ்காட்ச் எஸ் சன்ஸ் சேர்த்துக் கொள்ளவும்.

 ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளவும் 
பின்பு குல்பி ட்ரேயில் முடித்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா, முந்திரி பவுடர் சேர்த்து அதில் கலவையை ஊற்றி 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் இளநீர் குல்பி ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)