தேவையானவை
இட்லி மாவு செய்ய
புழுங்கரிசி - ஒரு கிலோ
உளுந்து - 200 கிராம்
கல் உப்பு - தேவையான அளவு
இளநீர் இட்லி செய்ய
இட்லி மாவு - ஒரு கப்
இளநீர் - 100 மில்லி
இளநீர் வழுக்கை - நான்கு டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை
இட்லி மாவு செய்ய அரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாக இரண்டு மணி நேரம் வரை நன்றாக ஊற விடவும்.
பின்னர் அவற்றை கழுவி அரிசியை அரைத்து எடுக்கவும்.
பின் உளுந்தை பஞ்சு போல ஆட்டி எடுத்து கல் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இளநீர் இட்லி செய்ய
அரைத்து வைத்துள்ள இட்லி மாவில் இருந்து ஒரு கப் தனியாக எடுத்து இளநீர் சேர்த்து நன்கு கலந்து ஆறு மணி நேரம் வரை புளிக்க விடவும்.
வெயில் குறைவாக இருந்தால் 8 மணி நேரம் வரை புளிக்க விடவும்.
இளநீர் வழுக்கையை மிக்ஸியில் போட்டு அரைத்து மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் சின்ன கிண்ணங்களில் தேங்காய் எண்ணெய் தடவி வைக்கவும்.
அதன் பிறகு முக்கால் பாகம் மாவை நிரப்பவும் பின் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் இட்லி தட்டில் இந்த மாவு நிரப்பி கிண்ணத்தை வைத்து மூடி வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேக விடவும் .
பின்னர் கப்பிலிருந்து ஓரங்களை நீக்கிவிட்டு மெதுவாக கவிழ்த்து சுடச்சுட பரிமாறவும்.
இந்த இட்லி சாப்பிட இளநீர் ருசியில் பஞ்சு போல இருக்கும்.
சுடும்போது இளநீர் தண்ணீர் சேர்த்து கலக்கக்கூடாது.
மாவை கெட்டியாக அரைத்து எடுத்து மொத்தமாக கலக்காமல் தேவையான மாவில் கலந்து புளிக்க விடவும்.