தேவையானவை
இளநீர் தண்ணீர் - இரண்டு கப்
தேங்காய் பால் - இரண்டு கப்
துண்டுகளாக நறுக்கிய இளநீர் வழுக்கை - ஒரு கப்
பனங்கற்கண்டு - தேவையான அளவு
ஏல பொடி - ஒரு சிட்டிகை
ஜம்சா விதை - ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் இளநீர் தண்ணீருடன் தேங்காய் பால் சேர்த்து வைக்கவும்.
சம்ஜா விதைகளை தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
இளநீர் தண்ணீர், தேங்காய் பால் கலந்த கலவையில் நறுக்கிய இளநீர் வழுக்கை, பொடித்த பனங்கற்கண்டு, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.
கடைசியாக தண்ணீரில் ஊறிய ஜம்ஜா விதைகளை போட்டு நன்கு கலந்து கண்ணாடி டம்ளர்களில் நிறைத்து பருகவும் .
இந்த பானத்தை அப்படியே பருகலாம். அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து குளிரச் செய்தும் பருகலாம்.
கோடைக்கு ஏற்ற சூப்பர் கூல்ட்ரிங்க் இது.