தேவையானவை
பெரிய நெல்லிக்காய் - 4
இஞ்சி - சிறு துண்டு
கெட்டி தயிர் - ஒன்றரை கப்
உப்பு - தேவைக்கு
செய்முறை
நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
இஞ்சி தோல் சீவி சிறு துண்டுகளாக்கவும்.
இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு தயிர், தேவையான உப்பு சேர்த்து மைய அரைக்கவும்.
பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கண்ணாடி டம்ளர்களில் நிரப்பி பரிமாறவும்.
சுவையான அதிக சத்து மிக்க பானம் இது.