கிச்சன் டிப்ஸ்

kuttybabuPPT
0
கிச்சன் டிப்ஸ் 

கோதுமை மாவை கரைத்து அதில் ஒரு டம்ளர் மோர் ஊற்றி கரைத்து உடனே தோசை வார்க்கலாம் .

தயிர் புளித்து விடுவது போன்று இருந்தால் அதில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.

 பாகற்காயை துண்டுகளாக்கி அரை மணி நேரம் லேசான சுடுநீரில் ஊற வைத்து பிறகு சமைத்தால் கசப்பு இருக்காது.

 பீட்ரூட்டை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் நரம்புகளுக்கு வலிமை உண்டாகும்.

 எந்த காயையும் நறுக்கும் முன் சில துளி எண்ணெயை கையில் தடவிக் கொண்டால் கரை படியாது .அரிப்பும் இருக்காது.

 வேகவைத்த முட்டையை துண்டாக்கும் முன்பு கத்தியை குளிர்ந்த நீரில் நினைத்து பின்னர் வெட்டினால் நேர்த்தியாக வரும் .

காபி பொடியை போடுவதற்கு முன் பில்டரின் அடிபாகத்தில் தீயை காட்டி விட்டு பின்பு உபயோகித்தால் டிகாசன் கலகலவென்று இறங்கும்.

 மண் பானையை சுற்றி மணலை பரப்பி மண்பானைக்குள் வெட்டிவேர், துளசி போட்டு நீர் ஊற்றி வந்தால் குடிநீர் குடிப்பதற்கு மணமாகவும், ஜில்லென்றும் இருக்கும்.

 சாதம் மீந்து போய்விட்டால் அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து வடகமாக காய வைத்து எடுத்து பொரித்தால் சுவையாக இருக்கும்.

 புளியோதரை செய்வதற்கு சாதத்தை ஆரம்பித்த பிறகு சூடான நல்லெண்ணையை பரவலாக ஊற்றி கிளறிய பிறகு புளி காய்ச்சலை சேர்த்து கிளறி விட புளியோதரை நல்லெண்ணெய் வாசனை உடன் சுவை தூக்கலாக இருக்கும்.

 பால்கோவா தயாரிக்கும் போது பால் நன்கு சுண்டியதும் ஊறவைத்த முந்திரியை அரைத்து சுண்டிய பாலுடன் சேர்த்து கிளறி பால்கோவா கூடுதல் சுவையாக இருக்கும்.

 கருவேப்பிலை, புதினா, கற்பூரவள்ளி தலை, மல்லித்தழை இவைகளை புளி , உப்பு இவைகளுடன் சேர்த்து அரைத்து நல்லெண்ணெய், கடுகை தாளித்து ஊற்றி கலக்க சத்தான கிரீம் துவையல் தயார் .

கைகளில் நல்லெண்ணெய் தடவிக் கொண்டு வாழைக்காய், வாழைப்பூவை நறுக்கினால் கைகளில் கருப்பு கரை வராது.

 கூர்மையான கத்திகளில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.

 தேங்காய் சட்னிக்கு அரைக்கும் போது பூண்டு மூன்று பற்களையும் சேர்த்தால் சட்னி ருசியாகும் .

கத்தியை சூடாக்கி ரொட்டியை வெட்டினால் பிசிர் இல்லாமல் அழகாக வெட்டலாம்.

 கைகளில் பெயிண்ட் பட்டு விட்டால் சமையல் எண்ணெயை சிறிதளவு எடுத்து தேய்த்தால் போய்விடும் .

அவலை ஊற வைக்கவும்.

 அதனுடன் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை அரைத்து ஊற விட அவலுடன் தயிர் கலந்து கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டினால் சுவையான அவல் பச்சடி தயார் .

கேழ்வரகு, கம்பு, பாசிப்பயறு, பட்டாணி, கொள்ளு, தட்டைப்பயிறு, வேர்க்கடலை, கோதுமை ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து முளை விட வைத்து நிழலில் உலர்த்தி பின் அவைகளை தனித்தனியாக பொன் நிறமாக வறுத்து சுக்கு, ஏலம் கலந்து பிஸ்தா, முந்திரி, பாதாம் , பருப்பு சேர்த்தால் குழந்தைகளுக்கான சத்து மாவு தயார் .

காலி பிளவரை சமைக்கும் போது தண்ணீரில் ஒரு தேக்கரண்டி பால் பவுடரை சேர்த்தால் காலிஃப்ளவர் வெண்மையாக இருக்கும்.

 தோசை மாவில் சிறிதளவு பெருங்காயத் தூளை கலந்து தோசை வார்த்தால் ருசியாக இருக்கும்.

 வாழைத்தண்டை நறுக்கி போட மோர் இல்லையேல் தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை ரசத்தை பிழிந்து அதன் உள் நறுக்கி போட்டால் தண்டு நல்ல வெள்ளையாகவே இருக்கும்.

 முறுக்கு, தேன்குழல் செய்யும்போது நீரோடு சிறிது தேங்காய் பால் சேர்த்தால் பலகாரம் அசத்தலாய் இருக்கும்.

 பைனாப்பிள் தூண்டுகள் மீது எலுமிச்சை சாறு தெளித்து உப்பு, மிளகுத்தூள், சாட் மசாலாத்தூள் தூவி சாப்பிட்டு பாருங்கள் இந்தப் பைனாப்பிள் சாலட் செம டேஸ்டாக இருக்கும் .

கூட்டு, சாம்பார் போன்றவற்றிற்கு தேங்காய் அரைத்து விட்ட பிறகு ஒரு கொதி வந்ததுமே இறக்கி விட வேண்டும். அதிகம் கொதிக்க விட்டால் சுவை கெட்டுவிடும்.

 எலுமிச்சம் பழ ஜூஸ் செய்யும் போது அதில் துளி புதினாவையும் அரைத்து போட்டு குடித்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

 வெயிலுக்கு வயிற்று உபாதைகள் வராது.

 சளி பிடிக்காது.

 சீரகம், வெந்தயம் இரண்டையும் சேர்த்து பொடித்து மோரில் கலந்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி அடையும்.

 வெண்ணையில் உப்பை தூவி விட்டால் அது பல நாட்களுக்கு கெடாமல் இருக்கும் .

வெண்ணை கட்டி மீது ஒரு தேக்கரண்டி சர்க்கரையை தூவி வைத்தால் உலராமல் இருக்கும் .

டீ தூளை பாட்டிலில் கொட்டும் போதே ஏலம், சுக்கை பொடித்து போட்டு கலக்கி விட்டால் தேநீர் கமகமக்கும் .

அப்பளம், வடகம் போன்றவற்றுடன் சிறிது பெருங்காயத்தை போட்டு வைத்தால் அவை அதிக நாட்கள் கெடாது .

சிறிது சர்க்கரையை தூவி வைத்தால் மிச்சர் விரைவில் நமத்துப் போகாது.

 வெள்ளரிக் காயுடன் பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதனுடன் தயிர் , உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி தண்ணீர் சேர்த்து அருந்த வெயிலுக்கு குளுமை தரும்.

 வெல்லப் பொடி, இஞ்சி துண்டு, சுக்கு பொடி, ஏலம், புதினா இவற்றை மிக்ஸியில் அரைத்து அதனுடன் உப்பு எலுமிச்சை சாறு, போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து மீண்டும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
 சுவையான எலுமிச்சை ஜூஸ் தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)